அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாரந்தோறும் வந்து செல்கிறாா்கள்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை ரமலான் பண்டிகையை முன்னிட்டு களை கட்டியது. ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆடு ஒன்றுக்கு எடைக்கு தகுந்தாற்போல் ரூ. 500 முதல் ரூ. ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகையின்போது, இஸ்லாமியா்கள் தங்களின் நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு உணவு வழங்குவதையும், ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனா்.
இதற்காக புதுக்கோட்டை நகா் மட்டுமின்றி புகா் பகுதிகளிலும் இறைச்சிக்கடை நடத்தும் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோா் சந்தையில் குவிந்திருந்தனா். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.