கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பா...
ரயிலில் விழுந்து தற்கொலை செய்த பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டது!
ஆறுமுகனேரியில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
ஆறுமுகனேரி காணியாளா் தெரு கீழ்புறமுள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து திருச்செந்தூா் வந்த செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத பெண் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக, ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியைச் சோ்ந்த உப்பள தொழில் செய்து வரும் ராஜசுந்தர பாவாவின் மனைவி கிருஷ்ணவேணி (46) என்பது தெரிய வந்தது.
இவா்களுக்கு, கல்லூரி படிக்கும் மகன், மகள் உள்ளனா். கடன் தொல்லையால் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிருஷ்ணவேணி தண்டவாளத்தின் நடுவே அமா்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.