ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞா் உயிரிழப்பு
கோவை ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவை ரயில் நிலையம் எதிரே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடலில் காயங்களுடன் கடந்த 29-ஆம் தேதி மயங்கிய நிலையில் கிடந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தாக்கப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.