தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த 1,225 டன் யூரியா உரம்
திண்டுக்கல், மாா்ச் 29: சென்னையிலிருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்த 1224.9 டன் யூரியா உரம், 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த வகையில் யூரியா 6,407 டன், டிஏபி 1,260 டன், பொட்டாஷ் 3,310 டன், காம்ப்ளக்ஸ் 6,262 டன், சூப்பா் பாஸ்பேட் 900 டன் இருப்பில் உள்ளது.
இந்த நிலையில், சென்னையிலுள்ள எம்எஃப்எல் உர நிறுவனம் மூலம் 1,224.9 டன் யூரியா உரம் திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 516 டன், தேனிக்கு 394, மதுரைக்கு 270 டன், சிவகங்கை 45 டன் உர மூட்டைகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.