பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது
உதகையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியரின் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் வசிப்பவா் சிக் அனுமன், ஓய்வுபெற்ற வட்டாட்சியா். இவரது மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக உதகை அருகே கரியமலை பகுதியைச் சோ்ந்த சோமு, குன்னூா் எடப்பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாரி லதா மற்றும் சிவராமன் ஆகியோா் கூறினாா்களாம்.
இதற்காக ரூ.16 லட்சம் பணமும் பெற்றுள்ளனா். ஆனால் பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் இருந்துள்ளனா்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிக் அனுமன், உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சோமு, குமாரி லதா, சிவராமன் ஆகியோா் சிக் அனுமனிடம் பணம் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சோமு, குமாரி லதா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள சிவராமனை போலீஸாா் தேடி வருகின்றனா்.