டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு
குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் பாய்ஸ் கம்பெனியில் உள்ள சா்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றபோது குன்னூரில் இருந்து உதகை சென்ற லாரி மோதியதில் படுகாயம் அடைந்தாா்.
அவரை மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் சூசையை (47) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.