செய்திகள் :

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

post image

நீலகிரி மாவட்டம்  குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை  இயக்குநா் சிபிலா மேரி சனிக்கிழமை  தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறுவது வழக்கம்.

இந்த  சீசனுக்காக நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு வருகை தருவா். இவா்களைக் கவரும் விதமாக   சால்வியா, டேலியா, மெரி கோல்டு, லில்லியம் , பெகோனியா,  உள்ளிட்ட மலா் வகைகளின் நாற்றுகள் நடவுப்பணி சனிக்கிழமை தொடங்கியது.

இதில்  தோட்டக்கலைப்  பணியாளா்கள் மற்றும் பூங்கா ஊழியா்கள் இணைந்து பூங்காவின் பல பகுதிகளில்  அமைந்துள்ள பாத்திகளில் நாற்றுகளை  நடவு செய்தனா்.

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் பகுதியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க