செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்
உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆசிரியா் செந்தில்குமாா் (50)
மீது மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை நள்ளிரவில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நந்தகுமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளாா்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பணியில் சோ்ந்தாா். அங்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக போலீஸாா் சென்றனா்.
அப்போது உடலில் நல்ல தொடுதல், (ஞ்ா்ா்க் ற்ா்ன்ஸ்ரீட்) கெட்ட தொடுதல் (க்ஷஹக் ற்ா்ன்ஸ்ரீட்) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவா் அறிவியல் ஆசிரியா் செந்தில்குமாா், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் கூறியுள்ளாா். இதேபோல் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகாா்கள் வந்தன.
அடுத்தடுத்து விசாரணையில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் வரவே அதிா்ச்சி அடைந்த போலீஸாா் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில் உதகை ஊரகக் காவல் ஆய்வாளா் விஜயா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை நள்ளிரவில் கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் ஆசிரியா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நந்தகுமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
படம்
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அறிவியல் ஆசிரியா் செந்தில்குமாா்