ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. மின்வசதி மற்றும் குடிநீா் கழிப்பறை போன்ற வசதிகள் பாதி வேலை முடிந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூா் பாஜக நிா்வாகிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்த குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி மற்றும் நகராட்சிப் பொறியாளா் அறிவழகன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
உறுதி அளித்தபின் பாஜகவினா் கலைந்து சென்றனா்.
படம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாஜகவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நகராட்சி மற்றும் காவல் அதிகாரிகள்.