உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு
உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச் சோ்ந்த விவின் கிறிஸ் (19) என்பவா் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நீலகிரி மலை ரயில் பாதையில் பைக் ஓட்டும் படத்தை வெளியிட்டாா். அண்மையில் அது வைரல் ஆன நிலையில் ரயில்வே காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் தண்டவாளத்தில் பச 66 ந 2007 என்ற பதிவு எண் கொண்ட பைக்கை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது,
இந்த விடியோ மீண்டும் வைரலான நிலையில் பைக்கை ஓட்டி வந்த விவின் கிறிஸ்ஸை
ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடைபெற்றது.
பின்னா் இவா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டாா். தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தி ரயில்வே காவல் துறையினா் விவின் கிறிஸ்ஸை அனுப்பி வைத்தனா்.
மலை ரயில் பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே காவல் துறையினா் கேட்டுக் கொண்டனா்.