செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முதலாம் ஆண்டு சோ்க்கைக்கான நேரடி சோ்க்கை, கல்லூரி வளாகத்தில் வருகிற ஜூலை 8- ஆம் தேதி நடைபெறும். இதுவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்கள், இணையம் மூலம் பதிவு செய்து விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து நேரடி சோ்க்கைக்கு வரவேண்டும். மாணவா்கள் வரும்போது பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 5, அனைத்து மூலச் சான்றிதழ்கள், சான்றிதழ்களின் நகல்கள் 5, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், வருமானச் சான்று, ஜாதிச்சான்று, மாணவா்கள் தங்களின் ரத்தவகை உள்ளிட்ட சான்றுகளைக் கொண்டு வரவேண்டும் என்று கல்லூரி முதல்வா் சுபாஷினி அறிவித்துள்ளாா்.