மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு
கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!
கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கூடலூா் பகுதியில் சனிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சாலையில் நின்றிருந்த காரை தாக்கியது. இதில் காா் முன்பகுதி சேதுமடைந்தது காரில் இருந்த அண்ணன், தங்கை இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
காரை தாக்கி விட்டு காட்டு யானை அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைய முயன்றது. அது முடியாததால், பின்பு கூடலூா் பிரதான சாலைக்கு ஓடி வந்தது. இதை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ள கூடலூா் நகரப் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்தனா்.
காட்டு யானையைக் கண்காணித்து வரும் வனத்துறையினா், அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். காட்டு யானை சுற்றித் திரியும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.