ராகுல் காந்தி பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 55 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கமுதி பேருந்து நிலையப் பகுதியில் வட்டார தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் கேக் வெட்டி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா். நகரத் தலைவா் சிதம்பரராஜன், பேரையூா் செல்வகுமாா், காமராஜ், போஸ், கருமலை, சக்திவேல், பாலு, குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.