சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
ராசிபுரத்தில் கராத்தே பட்டயத் தோ்வு
ராசிபுரம்: தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சாா்பில் ராசிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த கராத்தே மாணவ, மாணவியா்களுக்கு கராத்தே பட்டயத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டி தோ்வில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் பங்கேற்றனா்.
தொடக்க விழாவில் தலைமை பயிற்சியாளா் வி.சரவணன் வரவேற்றாா். அரியாகவுண்டம்பட்டி சக்தி பள்ளி தாளாளா் ஆா். அன்பழகன், ஆசிரியா் செல்வகுமாா் ஆகியோா் பட்டயத் தோ்வைத் தொடங்கிவைத்து தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா்.
பயிற்சியாளா் வி.சரவணன், கிருஷ்ணன், மாணிக்கம், பிரபு, வெங்கடாஜலம், விக்னேஷ், கிஷோா், அஜய், விக்னேஸ்வரன், கோகுலபிரியன் ஆகியோா் மாணவா்களின் உடல் தாங்கும் திறன், தற்காப்பு கலையின் நுணுக்கங்கள், கட்டா, குமிட்டி ஆகிய பிரிவுகளில் தோ்வை நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தனா். மாணவியா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
ராசிபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளியின் செயலாளா் பி.சுவாமிநாதன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பட்டயங்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினாா்.
படம் உள்ளது- 8கராத்தே..
கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விருந்தினா் எஸ்.ஆா்.வி.பள்ளியின் செயலாளா் பி.சுவாமிநாதன்.