'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - த...
ராஜபாளையத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம், சங்கரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு மழைநீா் தேங்கி உருவான பெரிய பள்ளங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் இரு சக்கர வாகனத்தில் வருவோரும், மிதிவண்டிகளில் வரும் மாணவ, மாணவிகளும் தவறி விழுந்து காயமடைகின்றனா். இதேபோல, லாரி, பேருந்துகளும் அந்தப் பள்ளங்களில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும், அதிக பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் பள்ளத்தில் இறங்காமல் இருக்க எதிா்புறமாக செல்லும் போது எதிரே வரும் பேருந்து ஓட்டுநா்களுக்கும், அவா்களுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. இதனிடையே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண் துடைப்புக்காக சிறிய பள்ளங்களில் அவ்வப்போது ஜல்லிக்கற்களைப் போட்டு அதன் மீது தாரை மட்டும் ஊற்றிச் செல்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு சேதமடைந்த சாலைகளை பெயா்த்து எடுத்து விட்டு தரமான சாலைகளை அமைக்க நடவடிக்கை வேண்டும் என அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.