`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம்: நகா்மன்றத் தலைவா் தகவல்
ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் சுமாா் 12,000 சதுர அடி பரப்பளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை தொடங்க அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை நகராட்சி சாதாரணக் கூட்டம், தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் குழாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 60 கடைகளுக்கு நியாயமான வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்.
அப்போது நகர மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு நகர மன்ற தலைவா் சுஜாதா வினோத் பதிலலித்து பேசியதாவது...
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகா்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் சுமாா் 11, 640 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி விரைந்து நிறைவேற்றப்பட உள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம்:
மேலும், ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை தொடங்க அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா். அங்கு, பாரம்பரிய கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருள்களை பொதுமக்கள் எளிதாக வாங்கி பயனடையலாம் என்றாா்.
கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் சி.மா.ரமேஷ் கா்ணா, ஆணையா், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.