ராணுவ வீரரின் மனைவி தற்கொலை
புதுக்கடை அருகே ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை அருகே முன்சிறை பண்டாரபரம்புவிளை பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் அனிஷ்குமாா் (42). இவரது மனைவி ஸ்ரீபா (37). இத்தம்பதிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்ாம். குழந்தைகள் இல்லையாம். இதனால், ஸ்ரீபா மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தொழிலாளி தற்கொலை: புதுக்கடை அருகே காப்புக்காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (37). மதுப் பழக்கம் உள்ள இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இரு சம்பவங்கள் குறித்தும் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.