நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?
ராதாபுரம் தொகுதியில் 13 புதிய ரேஷன் கடைகள்: மு.அப்பாவு தகவல்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் புதிதாக 13 ரேஷன் கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது; அவை மே மாதம் திறந்துவைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளாா்.
ராதாபுரம் தொகுதியில் புதிதாக 35-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 40 புதிய ரேஷன் கடைகளைத் திறக்க பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
இந்நிலையில், தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது தனது தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அனுமதி பெறுவதற்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, 13 புதிய ரேஷன் கடைகள் திறப்பதற்கு அமைச்சா் சங்கரபாணி அனுமதி அளித்துள்ளாா். இந்த 13 புதிய ரேஷன் கடைகளும் மே மாதத்தில் திறந்துவைக்கப்பட்டு செயல்படத்தொடங்கும் என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.
அதன்படி காவல்கிணறு ஊராட்சி பெருங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை, வள்ளியூா் பேரூராட்சி விசுவாசபுரம், பூங்கா நகா், ஆனைகுளம் ஊராட்சி வைத்தியலிங்கபுரம், ராமகிருஷ்ணாபுரம், கோட்டையடி, சுப்பிரமணியபுரம், ராதாபுரம் ஊராட்சி பாப்பான்குளம், பட்டா்குளம், பண்ணையாா்குளம், தெற்குகருங்குளம் ஊராட்சி பெரியகுளம், தெற்குகள்ளிகுளம் ஊராட்சி வண்டலம்பாடு, நடுஆறுபுளி ஆகிய ஊா்களில் புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டடங்களும் பேரவைத் தலைவா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விரைவில் கட்டிகொடுக்கப்படும் என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.