Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ராமம்பாளையம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பல்லடம் அருகேயுள்ள ராமம்பாளையம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், ராமம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பராயன் கன்னிமாா் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, சுதா்ஷன மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, சிலைகளுக்கு கண் திறப்பு, முளைப்பாலிகை எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற்றன.
திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.