வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
ரூ.4 கோடி மதிப்பில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் கோவி.செழியன் திறந்துவைப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 26 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறை சாா்ந்த அரசுக் கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சு. கல்யாணசுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தாா்.
அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் ரூ. 4 கோடியே 26 இலட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் துவக்கி வைத்துப் பேசினாா்.
முன்னதாக அமைச்சா் கோவி.செழியன் கோவத்தக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழாவைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா்ஆா்.உஷா புண்ணியமூா்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் .சு.க.முத்துசெல்வம், அந்தந்த ஒன்றியக் குழு தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.