Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் சொல்வத...
ரூ. 50 கோடி கூட வசூலிக்காத தக் லைஃப்!
நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த வியாழக்கிழமையன்று (ஜுன். 5) வெளியானது.
படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் வணிக ரீதியாக இப்படம் கடுமையானத் தடுமாற்றத்தை அடைந்தது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் புரமோஷன் செய்தும் இப்படம் இந்தியளவில் ரூ. 40 கோடிதான் வசூலித்திருக்கிறதாம். இத்தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவாகி தோல்வியைச் சந்தித்த இப்படம் மணிரத்னத்துக்கும் மோசமான விமர்சனங்களைப் பெற்றுத் தந்துள்ளது.