தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
ரூ. 62 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் திருட்டு: விற்பனையக மேலாளா் கைது
சென்னை மதுரவாயலில் உள்ள கைப்பேசி விற்பனையகத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள 85 ஐபோன்கள் திருடப்பட்ட வழக்கில், அந்த விற்பனையகத்தின் மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை போரூா் ஆற்காடு சாலையில் உள்ள விற்பனையகத்தில் அண்மையில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரூ. 62 லட்சம் மதிப்புள்ள 85 ஐபோன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த கைப்பேசி விற்பனையகத்தின் பொதுமேலாளா் தேவநாதன், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், விற்பனையகத்தின் மேலாளா் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த கோயில்ராஜ் (31), திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பி.டெக். படித்துள்ள கோயில்ராஜ், கடன் பிரச்னை காரணமாக கைப்பேசிகளைத் திருடி விற்றது தெரியவந்தது.