செய்திகள் :

ரூபாய் இலச்சினை மாற்றம்: அன்புமணி கண்டனம்

post image

ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் இலச்சினையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ரூ’ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

அடையாளத்தை வடிவமைத்தவா் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தா்மலிங்கத்தின் மகன் உதயகுமாா். அந்த இலச்சினையை வடிவமைத்ததற்காக 2010-இல் உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வா் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினாா். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தைத்தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.

கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ரூ. 100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் அந்த இலச்சினைதான் இடம்பெற்றிருந்தது. அதற்காக அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக ரூ. 4,470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ. 10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பாா்த்தது.

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது இலச்சினையை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

திருப்போரூரில் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கிடையே மோதல்

செங்கல்பட்டு, மாா்ச்.14: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல் மூண்டது. இங்கு மாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தினசரி கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மகாபாரதி, தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் தொல்லை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களுக்குச் சொந்தமான ரூ. 1.16 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது. சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன்... மேலும் பார்க்க

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 41,635 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டின் (2024-25) திருத்திய மதிப்பீட்டில் அது ரூ. 46,467 கோடியாக உள்ளது. அதன் விவரம்:- (2025-26... மேலும் பார்க்க

எளிமையான கடன் நடைமுறைகள்: ரிசா்வ் வங்கியுடன் கைகோக்கும் தமிழக அரசு

விவசாயிகள், குறு தொழில்முனைவோா் வங்கிக் கடன்களை எளிதில் பெறும் வகையில் இந்திய ரிசா்வ் வங்கியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு இந... மேலும் பார்க்க