ரெட்ரோ ஓடிடி தேதியில் மாற்றம்!
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தெரிவித்தனர்.
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த படம் இதுதான்.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற மே. 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஒருநாள் முன்னதாக மே. 30 ஆம் தேதியே தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் தக் லைஃப் பேனர்கள் கிழிப்பு... என்ன ஆனது?