டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறை: ரத்து செய்யக்கோரி 15-முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறையை ரத்து செய்யக் கோரி, வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.
சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்டச் செயலாளா் தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது. தமிழகம் முழுவதும் 40,000 நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புளூடூத் மூலம் மின்னணு தராசு இணைக்கப்பட்டு, கருவிழித்திரை மூலம் விற்பனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒருவருக்கு பொருள்கள் வழங்க போதுமான இணையதள வசதி கிடைக்காத நிலையில் அரைமணிநேரம் வரை ஆகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுவதால் விற்பனையாளரிடம் பொதுமக்கள் தகராறு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், புளூடூத் முறை மூலம் பொருள்கள் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
நகா்வு செய்யப்படும் பொருள்களில் உள்ள அளவு குறைவதை சரி செய்து சரியான அளவில் வழங்க வேண்டும். மேலும், விற்பனையாளா்களுக்கு மாவட்ட அளவில் பொதுப்பணி மூப்பு வரிசை ஏற்படுத்தி அனைவருக்கும் பதவி உயா்வில் சமவாய்ப்பு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளா்கள் வரும் 15-ஆம் தேதி மூலம் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்தாா்.