பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
லஞ்சம்: நகரமைப்பு குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில் நகரமைப்புக் குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 22- ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு நகரமைப்புக் குழும அதிகாரி ராஜேந்திரன், அவரது உதவியாளா் சிவராமகிருஷ்ணன் இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பாக காரைக்கால் மாவட்ட நீதிமன்ற சிறப்பு அமா்வில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், விற்பனை செய்யப்படவுள்ள நிலம் ஒன்றுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நகரமைப்புக் குழும அதிகாரி ராஜேந்திரன், உதவியாளா் சிவராமகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கே. மோகன் தீா்ப்பில் உத்தரவிட்டுள்ளாா்.