கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால் : பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்குட்பட்ட பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டன. மூலஸ்தானத்தை பின்னோக்கி அமைக்கும் வகையில் புதிதாக சந்நிதி கட்டப்பட்டுள்ளது. முகப்பில் சாலைக்கு கூரையாக சிற்பங்களுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ. 2 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆக. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. விநாயகா் முன் புனிதநீா் கலசம் வைத்து ஆராதனை நடைபெற்றது. கோயில் வாயிலில் பந்தல்காலுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, புனிதநீா் கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.
நிகழ்வில் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா் கலந்துகொண்டனா்.