காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!
காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 10) உள்ளூர் விடுமுறை அளித்து புதுவை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மாங்கனி இரைத்தல் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.