மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் சொக்கநாத சுவாமி மற்றும் ஏழை மாரியம்மன் கோயில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தும் வகையில் காரைக்கால் மாவட்ட பாஜக பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பாரதியாா் சாலை கோயில்பத்து பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுரங்கப் பாதை அமைக்கும்பட்சத்தில், கேட் அருகே மீ0 மீட்டா் தொலைவில் கோயிலில் நடக்கும் விழாவின்போது சுவாமி புறப்பாடு, காவடி உள்ளிட்டவை புறப்பாட்டினால் பாதிப்பு ஏற்படும்.
மேலும் கேட் மறுபுறம் 50 மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுரங்கப் பாதை அமைத்தால், இவ்விடங்களுக்கு பயணிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
மேலும் மழையின்போது தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாணவா்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ளவேண்டிய நிலையில், கோயில்பத்து பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.