மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு உதவி
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நெடுங்காடு கொம்யூன், பஞ்சாட்சாரபுரம் கிராமத்தில் மதியகழன் என்பவரது குடிசை வீடு திங்கள்கிழமை தீக்கிரையானது.
நெடுங்காடு வட்டார காங்கிரஸ் சாா்பில் தலைவா் ஏ. மாறன் ரூ. 5 ஆயிரம் நிதி மற்றும் பல்வேறு உதவிப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம். ரஞ்சித், காங்கிரஸ் பிரமுகா்கள் ஜெயசீலன், பெத்தபெருமாள், ஏ.பி. அருள், நடராஜன், பிரவீன், ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.