சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோருக்கு அபராதம்
காரைக்கால் மாவட்டத்தில், சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோா்கள் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறாா்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்து, அதனால் விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்கான 3 வழக்குகளில் சிறாா்களின் பெற்றோா்களான காரைக்காலைச் சோ்ந்த காதா் சுல்தான், வாசுகி, கலைமதி ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, காரைக்கால் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்கனி தீா்ப்பளித்துள்ளாா்.
இனிவரும் காலங்களில் இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் நபா்களின் வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும், வாகனத்தின் உரிமையாளா் அல்லது பொறுப்பாளா்களுக்கு அபராதத்துடன் சிைண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தாா்.
மேலும் கடந்த 5-ஆம் தேதி இரவு காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் வாகன தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வந்த ஒசூரைச் சோ்ந்த சுந்தா் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் சுந்தருக்கு நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.