நம்பமுடியாத ஆட்டம்; நிதீஷ் ராணாவுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு!
வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து கருப்பு பட்டை அணிந்து தொழுகை
வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
மத்திய அரசு வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளது. அதற்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அதன்படி, ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும் இஸ்லாமியா்கள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியா்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, ஆம்பூரில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டு பங்கேற்றனா்.
கருப்புப் பட்டை அணியாமல் வந்த இஸ்லாமியா்களுக்கு பள்ளி வாசல்களின் நுழைவு வாயிலில் கருப்புப் பட்டை அணிவிக்கப்பட்டது.