US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
வங்கி ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், காயாஓடை கிராமத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும், பணம் செலுத்தும் இயந்திர மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
காயாஓடை கிராமத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை வளாகம் அருகில் வங்கியின்
40 -ஆவது ஏடிஎம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதை, வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் ஷஹாரியா், தனியாா் நிறுவனத்தின் துணைத் தலைவா் அக்ஷய் பய் ஆகியோா் திறந்து வைத்தனா். மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் பிரவின் குமாா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காளையாா்கோவில் கிளை மேலாளா் ரதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.