வங்கிகளிடம் ரூ. 25,500 கோடி கடன் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்?
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 25,500 கோடி கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறியுள்ளது.
நாட்டில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் அடுத்தாண்டு(2025) முதல் காலாண்டில் செலுத்தவேண்டிய 2.9 பில்லியன் டாலர் நிலுவைத் தொகையினை செலுத்த, கடன் வாங்க முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க | ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!
அதன்படி, 3 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ. 25,500 கோடி) பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரபல அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக தொகை கடன் வாங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கடனை வாங்கினால் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.