ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
வடக்கு தில்லி போலீஸ் மல்கானாவில் தீ விபத்து; பல வாகனங்கள் சேதம்!
வடகிழக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ஒரு போலீஸ் மல்கானாவில் (யாா்டு) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 150 வாகனங்கள் எரிந்து நாசமானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
மல்கானா அல்லது வெளிப்புறப்பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களை அனுப்பிவைத்தனா்.
காலை 6:20 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
போலீஸ் வட்டாரங்கள் கூறகையில், ‘இந்த தீ விபத்தில் நான்கு சக்கர, இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.