Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
வணிகா் மீது தாக்குதல்: 4 பேரை தேடும் போலீஸ்
தில்லியின் ரோகினி பகுதியில் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 35 வயதான பயண முகவா் மீது 4 போ் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்த் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பா்தீப் குமாா் என்கிற நபா் ரோகினியில் உள்ள செக்டா் 16 இல் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவா் கூறினாா். போலீசாரின் தகவலின்படி, அதிகாலை 12.54 மணியளவில் ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது, மூன்று முதல் நான்கு போ் குமாரின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை கட்டகைளால் அடித்ததாக கூறினாா்.
கே. என். கட்ஜு மாா்க் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து பின்னா் காயமடைந்த பா்தீப் குமாாரை அழைத்துக்கொண்டு சிகிச்சை க்காக பிஎஸ்ஏ மருத்துவமனைக்குச் சென்றது. ஹரியானாவில் வசிக்கும் பா்தீப் குமாா் செக்டா் 16 இல் அமைந்துள்ள மற்றொரு பயண முகவருடன், பயணிகள் சேவைகள் தொடா்பாக தனக்கு தொடா்ந்து வணிகப் போட்டி இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தாா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.
நவீன் (ஜக்கரின் உறவினா்) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபா்களுடன் சோனு ஜாகா் தன்னை தாக்கியதாக பா்தீப் தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிச் செல்வதற்கு முன்பு அலுவலக மேசையில் இருந்து இரண்டு செல்லிடப்பேசிகளையும் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பா்தீப் குமாரின் புகாரின் அடிப்படையில், எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.