மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
வனத் துறையினா் கெடுபிடி: மாடுகளை விற்பனை செய்யும் மலை கிராம மக்கள்
மேகமலைக் கிராமங்களில் வனத்துறை கெடுபிடி காரணமாக மாடுகளை கேரள வியாபாரிகளுக்கு பொதுமக்கள் விற்று வருகின்றனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, மேல் மணலாறு, வெண்ணியாறு என 7 மலைக் கிராமங்கள் உள்ளன.இங்குள்ள தோட்டத் தொழிலாளா்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா்.
தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என சின்னமனூா் வனச்சரகம் சாா்பில் மலைக்கிராமத்தினருக்கு தடை வித்தனா். இதனால், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், கால்நடைகளை குறைந்த விலைக்கு கேரளத்துக்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
இதுகுறித்த தேயிலைத் தோட்டத்தொழிலாளா் சங்கப் பிரதி முத்தையா கூறியதாவது: வனத்துறையினரின் கெடுபிடியால் மலைக் கிராமத்தினா் கால்நடைகளை விற்பனை செய்கின்றனா். இதனால், இந்தப் பகுதி குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வனத்துறையினா் கெடுபிடிகளைத் தளா்த்த வேண்டும் என்றாா் அவா்.