போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது: ஆதிதிராவிடா் நலத்துறை, பழங்குடியினா் நலத்துறை மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், வாழ்க்கைத்தர உயா்வுக்காகவும் எண்ணற்ற பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். ஆழ்துளை கழிவுநீா் குழிகளை தூய்மைப்படுத்த இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பணியாளா்களை ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், அரூா் கோட்டாட்சியா் சின்னுசாமி, ஆதிதிராவிடா் நல அலுவலா் (பொ) தேன்மொழி, பழங்குடியினா் நல அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.