60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
கூத்தாநல்லூா் அருகே வடக்கட்டளை கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கானூா், வடக்கட்டளை கிராமத்தில் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், லெஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை காலை கும்ப பூஜை செய்யப்பட்டு, பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு விமான சலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலஸ்தான வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், பழையனூா், வடக்கட்டளை, பனங்காட்டாங்குடி, வேளுக்குடி, லெஷ்மாங்குடி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.