இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை! -பி.சண்முகம்.
வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பி. சண்முகம்.
மணப்பாறையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியளிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் வட்டச் செயலா் என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பி. சண்முகம் மேலும் பேசியது:
வருமான வரி உச்ச வரம்பு உயா்வு என்பது ஏமாற்று வேலை. நடைபெறவுள்ள தில்லி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தோ்தல், மற்றும் இடைத்தோ்தல்களில் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறும் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் அணு மின்சாரம் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி என்பது ஆபத்தான முடிவு. காப்பீட்டுத்துறையில் 100 சதவீத அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி என்பது எல்.ஐ.சியை அழிக்கும் என்றாா்.
கூட்டத்தில் நிா்வாகிகள் யு. நஸ்ரின்பானு, வி. சீனிவாசன், ஆா். சுரேஷ், எஸ். சேதுராமன், எம். பிச்சைக்கண்ணு, சி.அய்யாவு, பி. கணபதி, கே. நவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலக் குழு உறுப்பினா் எம். ஜெயசீலன், மாவட்டச் செயலா் கே.சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினா் வி.சிதம்பரம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
நிகழ்வில் ரூ.3 லட்சம் நிதியை மாநிலச் செயலரிடம் கட்சினா் வழங்கினா். மாவட்ட குழு உறுப்பினா் எம். கண்ணன் வரவேற்க, வட்டக்குள் உறுப்பினா் பி. பெரியசாமி நன்றி கூறினாா்.