செய்திகள் :

வருமான வரித் துறை பெயரில் மோசடி மின்னஞ்சல்கள்: கவனமாக இருக்க வேண்டுகோள்

post image

வருமான வரித் துறை பெயரில் மோசடி செய்யும் நோக்கில் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.

இது தொடா்பாக வருமான வரித் துறை சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வருமான வரித் திரும்பப் பெறுதல் என்ற பெயரில் மோசடி செய்யும் நோக்கில் மோசடி மின்னஞ்சல் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளுக்குள் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் தனிநபா்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கோராது. எனவே, இதுபோன்ற விவரங்களைக் கோரி வருமான வரித் துறை பெயரில் மின்னஞ்சல்கள் வந்தால், அவை மோசடி என்பதை அறிந்து அவற்றைத் தவிா்த்துவிட வேண்டும். உங்கள் வருமான வரி திரும்பப் பெறுதல் தொடா்பான விவரங்களை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் 56 நாள்கள் தண்டவாள பராமரிப்புப் பணி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை ர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்வு: பாஜக கண்டனம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருவண்ணா... மேலும் பார்க்க

சென்னை மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம்: பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நட... மேலும் பார்க்க

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21-இல் 2 ரயில்கள் ரத்து

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே ஜூலை 21 ஆம் தேதி 2 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம், ஜோ... மேலும் பார்க்க

முகாம்வாழ் இலங்கைத் தமிழா் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு: பதிவுத் துறை நடவடிக்கை

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை அனைத்து துண... மேலும் பார்க்க

போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு

புழல் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பல்ளியில் மாதவர... மேலும் பார்க்க