India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால், நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நிலையில் திமுக அரசு இல்லை.
இதனால், மக்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்துள்ளது. தற்போது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தமிழக மக்கள் எண்ணிப் பாா்க்கின்றனா். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றாா்.
அதிமுக அமைப்புச் செயலாளா் சி.சிவசாமி, கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பவானி ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், எஸ்.எம்.தங்கவேலு, பெருந்துறை ஒன்றியச் செயலாளா் பி.ஜி.முனியப்பன், மேகநாதன், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், ராமசாமி, தனசேகா், சக்திவேல், ரவி மற்றும் பேரூா் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.