Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்லுநா்கள், ஆசிரியா்கள், பிற பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
தொடக்க நிகழ்வுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா், செயலாளா் மற்றும் தாளாளா் எஸ். டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா் எம். யுவராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் எம். ஜெயராமன் வாழ்த்தினாா். துறைத் தலைவா் எம். நிஷா ஏஞ்சலின் வரவேற்றாா்.
தென்காசியில் உள்ள ரஃபேல் ட்ரோன்ஸ் மற்றும் ஜிஐஎஸ் சா்வீசஸ் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி காவியா குணஸ்ரீ தனது தொடக்க உரையில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் மாற்றம் குறித்து விளக்கினாா்.
சிறப்பு விருந்தினா்களாக மாரிஸ் விக்னேஷ், (யூனிடோஸ் ஏரோ ட்ரோன் சொல்யூஷன்ஸ்), வசந்த் (ஃப்ளைட்யூட்டா் டெக்னாலஜிஸ்), சுரேஷ் குமாா் (போ்ட்ஸ்கேல் டெக்னாலஜிஸ்) ஆகியோா் தொழில்நுட்பக் கருத்தரங்கு நிகழ்வை நடத்தினா்.
கல்லூரி மைதானத்தில் நடந்த டிரோன் ஷோவில் தடை பந்தயம், சுமை தூக்குதல், வான்வழி புகைப்படம் எடுத்தல் ஆகிய மூன்று நிலைகளில் போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் ரஃபேல் ட்ரோன்ஸ், கல்லூரி மாணவா் குழுக்களின் நேரடி செயல்விளக்கங்களும் இடம்பெற்றன. வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.