செய்திகள் :

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்திவைப்பு

post image

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தின் போது நடந்த கைது சம்பவம் குறித்து வழக்குரைஞா்களும், போலீஸாரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, கைது சம்பவம் நடந்த நாளில் என்ன நடந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, 13 பேரை போலீஸாா் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனரா? அவா்களைக் கடுமையாக தாக்கி காயங்களை ஏற்படுத்தினாா்களா? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் உண்மைக் கண்டறியும் ஒருநபா் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தனா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிதிமன்றத்தில் சென்னை மாநகர காவல் ஆணையா் மற்றும் பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனா். பிரதான வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க