சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
`வா வாழலாம்..!’ திருமண தேதியை அறிவித்தது, தமிழ் பிக்பாஸ் மூலம் காதலித்து கரம் பிடிக்கும் முதல் ஜோடி!
2023 ம் ஆண்டு காதலர் தினத்தன்று காதலை முறைப்படி உலகத்துக்குச் சொன்ன பிக்பாஸ் ஜோடியான அமீர் - பாவ்னி, இந்தக் காதலர் தினத்தில் கல்யாண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வரும் ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நாட்களில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிவதெல்லாம் இந்தி பிக் பாஸில் சாதாரணமானது. ஆனால் தமிழில் பிக்பாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்யவிருக்கும் முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற இருக்கிறார்கள் அமீர் - பாவ்னி.
முன்னதாக இந்த ஜோடி காதலை அறிவித்திருந்த போது ஐரோப்பாவில் இருந்த பாவனியிடம் பேசியிருந்தோம்.
‘’சீரியல்களில் நடிச்சிட்டிருந்த எனக்கு பிக்பாஸ் வாய்ப்பைத் தந்த சேனலுக்கு முதல் நன்றியைத் தெரிவிச்சுக்கிடுறேன். ஏன்னா அந்த நிகழ்ச்சி எனக்குப் பெரிய ரீச்சைத் தந்தது. பிக்பாஸுக்கு முன் பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம்.
நிறைய ரசிகர்களை எனக்குத் தந்தது மட்டுமில்லாம எனக்கு வாழ்க்கையைத் தந்ததும் அந்த நிகழ்ச்சி தானே? அதுல கலந்துக்கலைன்னா அமீரை நான் சந்திச்சிருப்பேனானு தெரியலையே?
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/e43459a5-e9ac-403c-8d92-acd5e1a105c3/65ca57516a17f.jpg)
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் என் மீது காட்டின அக்கறை என்னை ஏதோ செய்தது. எங்க ரெண்டு பேருக்குமிடையில் இருந்தது காதல்னு ரெண்டு பேருக்குமே கொஞ்ச நாள்லயே புரிஞ்சிடுச்சு. இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனுதான் லவ்வர்ஸ் டே அன்னிக்குச் சொல்றோம்’ எனக் கூறியிருந்தார்.
மேலும் ’திருமணத்துக்கு கொஞ்க காலம் ஆகலாம். ஏன்னா ரெண்டு பேருமே இப்பதான் சினிமாவுல தலைகாட்டத் தொடங்கியிருக்கோம். வர்ற வாய்ப்புகளை மிஸ் பண்ணாமப் பண்ணிட்டு அப்புறம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்’ எனவும் சொல்லியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/396a1c4c-79f3-4d4a-9a8b-4f25fb04d99a/65ca5752f3c27.jpg)
இந்நிலையில் சரியாக இரண்டு வருடம் கழித்து இந்தக் காதலர் தினத்தில் திருமண தேதியை அறிவித்திருக்கிறார்க்ள் இவர்கள். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 20 ம் தேதி நடக்கவிருக்கிறதாம். பாவ்னி, தனது இன்ஸ்டா பதிவில் `வா வாழலாம்’ என்ற பதிவுடன் தேதியை அறிவித்துள்ளார்.
அமீர் பாவ்னி ஜோடிக்கு டிவி, சினிமாப் பிரபலங்கள் பலரும் இப்போதே வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play