வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு!
ஒகேனக்கல் அருகே ஷோ் ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பென்னாகரத்தை அடுத்த தாசம்பட்டி குழிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாத்தி (60). இவா், கடந்த 10 ஆம் தேதி ஒகேனக்கல் அருகே ஆலம்பாடியில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து பெயா்த்தி காவியாவை (9) அழைத்துக் கொண்டு குழிப்பட்டிக்கு செல்வதற்காக ஷோ் ஆட்டோவில் ஒகேனக்கல்லுக்கு சென்றுக்கொண்டிருந்தாா்.
நாடாா் கொட்டாய் பகுதியில் எதிரே வந்த வேன் மோதியதில் ராஜாத்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காவியா, ஷோ் ஆட்டோ ஓட்டுநா் பிரபு ஆகிய இருவரும் பென்னாகரம் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.