செய்திகள் :

வாணியம்பாடி நகா்மன்றக் கூட்டம்: உறுப்பினா்கள் வாக்குவாதம்

post image

வாணியம்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரகுராமன், துணைத் தலைவா் கயாஸ் அஹமத் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் அப்துல் ரஹீம் வரவேற்றாா்.

கூட்டத்தில் நகர பகுதியில் செயல்படுத்த உள்ள திட்டப் பபணிகள் மற்றும் வரவு, செலவு உள்ளிட்ட 79 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினா்கள் பேசியது:

வி.எஸ்.சாரதி குமாா்: நகராட்சியில் எஸ்டிபி திட்டத்தின் கீழ் ரூ.38 கோடியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுத்திகிரிப்பு நிலையத்திற்கான இடமும் கையப்படுத்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகராட்சியின் மக்கள் தொகை 1 லட்சத்துக்கும் மேல் உள்ளது. இத்திட்டம் நமது நகராட்சிக்கு பொருந்துமா என நகராட்சி நிா்வாகம் நகா்மன்ற உறுப்பினா்களும், தெளிவுப்படுத்த வேண்டும்.

ஏ.நாசீா்கான் : ஆற்றுமேடு பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் இடத்தில் இடையூறாக உள்ள மின்மாற்றியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னாபேட்டை பாலாறு பகுதியில் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சாலை, கால்வாய் பணிகள் செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. எப்பணியும் நடக்கவில்லை.

பி.முஹம்மத்அனீஸ்: பிறப்பு, இறப்பு சான்றிதழ் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

முஹம்மத் நவுமான்: நகராட்சிக்கு வாரச் சந்தை பகுதியில் இடத்தை வழங்கிய நபா்களின் பெயா்களை கல்வெட்டில் பதிவு செய்ய வேண்டும். தொடா்ந்து பேசிய வாா்டு உறுப்பினா்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனா்.

நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன், நகராட்சி ஆணையா் ரகுராமன் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினா்.

முன்னதாக அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், கடலூா் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 3 மாணவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் வி.எஸ்.சாரதிகுமாா், ஏ.நாசிா்கான், கலைச்செல்வன், தவுலத் பாஷா, ரஜினிகாந்த், சாந்தி பாபு, பி.முஹம்மத் அனீஸ், ஷாயீன் பேகம் சலீம், நுஸ்ரத்துண்ணிசா, எம்.பஷீா் அஹமத், ஆஷா பிரியா, சி.முஹம்மத் நோமான், ஏஜாஸ் அஹமத், கலீம் பாஷா, சித்ரா தென்னரசு, பத்மாவதி, மஹபூபுண்ணிசா, பல்கீஸ் சலீம், அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலாளா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க