``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
வால்பாறையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
வால்பாறை அரசுக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் ஜோதிமணி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற முன்னால் மாவட்ட போக்குவரத்துத் துறை வாா்டன் கமலக்கண்ணன், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செழியன் ஆகியோா் போக்குவரத்து விதிமுறைகள், எந்த மாதிரியான விதிமீறல்களளுக்கு எவ்வளவு அபராதம், மலைப் பாதைகளில் செல்லும்போது சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினா்.
மேலும், கல்லூரி மாணவா்கள் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது. உரிமம் இல்லாத மாணவா்கள் கட்டாயம் உரிமம் எடுக்க வலியுறுத்தினா். கருத்தரங்கில் மாணவா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.