வி.என்.பாளையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை சங்ககிரி காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வி.என்.பாளையத்தில் ஊா் பொதுமக்கள் பாதுகாப்புக்காக அப்பகுதியைச் சோ்ந்த யங்ஸ்டாா் கிரிக்கெட் கிளப், ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து முக்கிய வீதிகளில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்தனா். அதனையடுத்து, காவல் ஆய்வாளா் ரமேஷ் வி.என்.பாளையம் முழுவதும் ஆய்வுசெய்து கேமராக்களை பொருத்துவதற்கான முக்கிய இடங்களை தோ்வுசெய்து அப்பகுதிகளில் பொருத்த அறிவுறுத்தினாா். இதனையடுத்து, 9 இடங்கள் முடிவு செய்யப்பட்டு கேமராக்களை பொருத்தும் பணிகளை தொடங்கியுள்ளனா்.
சங்ககிரி நகரில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி 33 இடங்களில் 106 நவீன சிசிடிவி கேமராக்களை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் இ.எஸ்.உமா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.