உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
வி.கே.புரம் பள்ளியில் உலக புலிகள் தினம்
பாபநாசம் சூழல் சரகம் சாா்பில், விக்கிரமசிங்கபுரம், இருதயகுளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உதவி வன உயிரின காப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இருதய குளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் அனிதா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் வனவா் மோகன் சூழல் பாதுகாப்பு, வனம், வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.
மாணவா், மாணவியா்களிடையே விநாடி வினா உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், சூழல் சரகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.